முகப்பு
தமிழ்நாடு

தலைவலிக்குத் தீர்வு காண தலையை வெட்டிக் கொள்வதற்குச் சமமானது நிதி ஆயோக்கின் யோசனை: மருத்துவர் ராமதாஸ்!

அரசுப் பள்ளிகளின் செயல்பாடு திருப்தியளிக்காத பட்சத்தில் அதிலுள்ள குறைகள் கண்டறியப்பட்டு நிவர்த்தி செய்யப்பட வேண்டுமே தவிர, அத்தகைய பள்ளிகளை அப்படியே தனியாருக்கு தாரை வார்க்க நினைப்பது எந்த அளவில்  

Updated On : 30 ஆகஸ்ட், 2017 at 10:55 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:16 PM

“சரியாகச் செயல்படாத அரசுப் பள்ளிகளால் கல்வித்தரம் சீரழிந்து வருவதாகக் கூறி அத்தகைய அரசுப்பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்க நினைப்பது தலைவலிக்குத் தீர்வு காண நினைத்து தலையை வெட்டிக் கொள்வதற்குச் சமம்” இப்படி ஒரு எதிர்மறையான யோசனையை முன் வைத்த நிதி ஆயோக் திட்டக்குழு அமைப்புக்கு மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளின் செயல்பாடு திருப்தியளிக்காத பட்சத்தில் அதிலுள்ள குறைகள் கண்டறியப்பட்டு நிவர்த்தி செய்யப்பட வேண்டுமே தவிர, அத்தகைய பள்ளிகளை அப்படியே தனியாருக்கு தாரை வார்க்க நினைப்பது எந்த அளவில்  அங்கு பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் அல்லது மாநிலத்தின் கல்வித்தரத்தை உயர்த்தக் கூடும் எனத் தெரியவில்லை. என்பதாக மருத்துவர் ராமதாஸ் இவ்விஷயத்தில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.