எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் செல்வோம்: எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன்
எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் செல்வோம் என தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் செல்வோம் என தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னையின் இருந்து இன்று அதிகாலை புதுச்சேரி திரும்பிய தங்கதமிழ்ச்செல்வன் நடைபயிற்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வண்டலூரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கட்சியை கூறுபோட விடமாட்டேம் முதல்வர் பேசியிருப்பது நியாயமற்றது. அரசு விழாவில் இப்படி பேசியிருப்பது தவறான நடைமுறை.
அதிகாரத்தை வைத்து அனைத்து காரியத்தை சாதிக்கலாம் என்பது நடக்காத காரியம்.அரசியல் நாகரீகம் தெரியாமல் பேசுகின்றனர்.
இவர்கள் எப்படி மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுக்க முடியும். எங்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியே தேவையில்லை. முதல்வர் எடப்பாடி மாவட்ட வாரியாக எம்.எல்.ஏக்களை சந்திக்க உள்ள நிலையில் எங்களுக்கு அழைப்பு இல்லை. எங்களை மீறி கூட்டம் கூட்ட வேண்டிய அவசியம் என்ன?
இந்த கூட்டத்திற்கும் அவர்கள் நினைத்தைபோல் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள். மக்களுக்கு உண்டான திட்டங்கள் எதுவும் இல்லை.
ஒற்றுமையை நிலைநாட்டி திட்டங்களை கொண்டு செல்வதற்கான செயல்பாடு அவர்களிடம் இல்லை.
எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் செல்வோம் அகற்றப்பட வேண்டிய முதல்வர் பழனிச்சாமி என்றார்.