முகப்பு
தமிழ்நாடு

கடலூரில் விவசாயி தலை துண்டித்துக் கொலை: இளைஞர் கைது 

வடலூர் ஆபத்தாரண புரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்ற விவசாயி தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:47 PM
பகிர்:

வடலூர் ஆபத்தாரண புரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்ற விவசாயி தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் வடலூர் ஆபத்தாரண புரம், பாட்டைவீதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (36) விவசாயி. கடந்த 24-ம் தேதி இரவு வெளியில் சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. 

இதுகுறித்து, அவரது அண்ணன் சிவசங்கர் (40), வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (29) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முருகனின் மனைவியுடன் ஆனந்தராஜ் தகாத உறவு வைத்திருந்ததைப் பலமுறை கண்டித்தும் கேளாததால் தலையைத் துண்டித்து
கொலை செய்து மாட்டுச்சந்தை அருகில் உள்ள புதரில் உடலையும், துண்டிக்கப்பட்ட தலையை அருகில் உள்ள கேணியிலும் வீசி சென்றார். 

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் அழுகிய நிலையில் இருந்த உடலையும், கிணற்றில் வீசப்பட்ட தலையையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →