தமிழ்நாடு

அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி: பள்ளி, கல்லூரிகளில் நடத்தத் தடை

DIN

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி, பொருள்காட்சி நடத்த, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக, திருப்பூரைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'திருப்பூரில் உள்ள  சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் வரும் டிசம்பர் 3 -ஆம் தேதி முதல் அரசுப் பொருள்காட்சி நடைபெற உள்ளது. இந்தப் பொருள்காட்சி 45 நாள்கள் நடைபெறும். இதனால் கல்லூரியில் வகுப்புகள் நடைபெறுவதற்கு இடையூறாக இருக்கும். எனவே, இந்தப் பொருள்காட்சியை கல்லூரி வளாகத்தில் நடத்தத் தடை விதிக்க வேண்டும்' எனக் கோரியிருந்தார். 
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 'கடைசி நேரத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால் திருப்பூர் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ள பொருள்காட்சிக்கு தடைவிதிக்க முடியாது. இனிவரும் காலங்களில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி -பொருள்காட்சி நடத்தத் தடைவிதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக அரசு விதிமுறைகளை வகுக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT