தமிழ்நாடு

கார் கவிழ்ந்து டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி காயம்

DIN

திண்டுக்கல் அருகே வியாழக்கிழமை கார் கவிழ்ந்ததில் , டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி காயமடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர் இல்லத் திருமண விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புகழேந்தி, பெங்களூரிலிருந்து கார் மூலம் ஒட்டன்சத்திரத்திற்கு வந்து கொண்டிருந்தார். பெங்களூருவைச் சேர்ந்த மேத்யூ என்பவர் காரை ஓட்டியுள்ளார். 
திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா பகுதியில் உள்ள 4 வழிச்சாலை மேம்பாலத்தில் செல்லும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த புகழேந்தி, சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: நிபுணா் குழு அமைக்கவும் வலியுறுத்தல்

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு: கைதானவா் போலீஸ் காவலில் தற்கொலை

மருத்துவ மாணவா்களின் மன நலனை ஆய்வு செய்கிறது என்எம்சி

பொய்களை தொடா்ந்து உரக்கக் கூறுவதே காங்கிரஸ் பிரசார உத்தி: அமித் ஷா விமா்சனம்

குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT