தமிழ்நாடு

குழித்துறை ரயில் நிலைய தண்டவாளத்தில் அமர்ந்து மீனவ குடும்பத்தினர் மறியல்

DIN


குழித்துறை: ஒக்கிப் புயல் காரணமாக கடலில் மாயமான மீனவர்களை பத்திரமாக மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பத்தினர்  மறியலில் ஈடுபட்டனர்.

மீனவக் குடும்பத்தினர் ரயில் மறியலில் ஈடுபடும் குழித்துறை ரயில் நிலையத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ரயில் மறியலில் ஈடுபட மீனவ குடும்பத்தினர் ஆயிரக்கணக்கானோர் குழித்துறை நோக்கி பேரணியாக வந்ததால், இன்று காலை முதலே பல பகுதிகளில் போக்குவரத்து முடக்கப்பட்டது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னமும் மீட்கப்படாத நிலையில், வெறும் 86 மீனவர்கள் மட்டுமே மீட்கப்படவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது உண்மைக்கு மாறானது என்றும் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடலில் தத்தளித்து வரும் மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

குழித்துறையில் ரயில் மறியலில் ஈடுபடுவதற்காக, சுமார் 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் என ஆயிரக்கணக்கானோர் இரு பிரிவாக பேரணியாக வந்தனர்.

கன்னியாகுமரியின் தலச்சன்விளை பகுதியில் இருந்து ஒரு பிரிவினரும், இஞ்சிவிளை பகுதியில் இருந்து மற்றொரு பிரிவினரும் பேரணியாக வந்துள்ளனர்.

இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீட்கப்படவில்லை என்று கூறி மீனவ கிராமத்தினர் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். காணாமல் போன மீனவர்கள் அனைவரையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குழித்துறை ரயில் நிலையத்தில் மீனவ கிராம மக்கள் ஏராளமானோர் தண்டவாளங்களில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர். கைகளில் கறுப்புக் கொடி வைத்திருக்கும் ஏராளமான இளைஞர்களும், பெண்களும் தண்டவாளத்தில் அமர்ந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT