தமிழ்நாடு

முதியவர் கொன்று புதைப்பு: மகள், நண்பரிடம் போலீஸார் விசாரணை

தினமணி

சேலத்தில் முதியவர் கொன்று புதைக்கப்பட்டார்.  இதுதொடர்பாக அவரது மகள் மற்றும் நண்பரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் மனைவி கமலா (40). சாமிநாதபுரத்தில் உள்ள கிழங்கு ஆலையில் வேலை செய்து வந்தார்.  இவர் உடல் நலம் குன்றிய தனது தந்தை பழனிசாமியை (85) தன்னுடன் வைத்து கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில்,  கமலா வேலை பார்க்கும் கிழங்கு ஆலைக்கு பழனிசாமி சென்று, கமலா தன்னைக் கவனிப்பதில்லை என்று புகார் கூறி வந்தாராம்.  இதனால் தந்தையைக்  கொலை செய்யத்  திட்டமிட்ட கமலா,   தனது நண்பரான அம்மாப்பேட்டையைச் சேர்ந்த சண்முகத்திடம் (40) தெரிவித்துள்ளார். இதையடுத்து சண்முகம்,  கடந்த சனிக்கிழமை பழனிசாமியை கிழங்கு மில்லுக்கு அழைத்துச் சென்று,  அவர் மீது அதிக எடை கொண்ட மாவு மூட்டையைப் போட்டுள்ளார். 

இதில் அவர் மூச்சுத் திணறி இறந்தார். இதையடுத்து,  அப் பகுதியில் காலியாக இருந்த இடத்தில் பழனிசாமியை புதைத்துவிட்டு சென்றார்.  இந்த நிலையில், அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசியதால்  அங்கு சென்று பார்த்த போது,   மனித உடல் புதைக்கப்பட்டிருந்து தெரியவந்தது.  இதையடுத்து,  ஆலை மேற்பார்வையாளர் குமார்,  பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் செய்தார். 

இதையடுத்து புதன்கிழமை காலை வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் பழனிசாமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு,  அதே இடத்தில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.  இதையடுத்து பழனிசாமியின் மகள் கமலா, அவரது நண்பர் சண்முகம் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதில்,  கமலா கூறியதன்பேரில் பழனிசாமியை தான் கொலை செய்து புதைத்தாக சண்முகம் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப் பிறகு இருவரும் கைது செய்யப்படுவார்கள் என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT