தமிழ்நாடு

கன்னியாகுமரியில் சுற்றுலாப் படகுச் சேவை ரத்து: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

DIN

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்குச் செல்லும் படகுச் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், 133 அடி உயரத் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றைக் கண்டு களிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இதற்காகப் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே கடல் நீர் மட்டம் குறைவு, சூறைக் காற்று என்று பல்வேறு காரணங்களைக் காட்டி அடிக்கடி படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. இதனால் பெரும்பாலான நாட்களில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றைக் கண்டுகளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை உள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் கடலில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்குச் செல்லும் படகுச் சேவை இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT