தமிழ்நாடு

தலைமைச் செயலாளராக நிதித்துறை செயலர் சண்முகத்திற்கு கூடுதல் பொறுப்பு!

தமிழக அரசின் தலைமைச் செயலாளரான கிரிஜா வைத்யநாதன் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தலைமைச் செயலாளராக நிதித்துறை செயலர் சண்முகத்திற்கு கூடுதல்...  

DIN

சென்னை; தமிழக அரசின் தலைமைச் செயலாளரான கிரிஜா வைத்யநாதன் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தலைமைச் செயலாளராக நிதித்துறை செயலர் சண்முகத்திற்கு  கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருப்பவர் கிரிஜா வைத்யநாதன். சில தினங்களுக்கு முன்பு அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட  அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை அரசு பொது மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உடனே திரும்பினார்.

இந்நிலையில் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டதால் தற்பொழுது அவர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக நிதித்துறை செயலர் சண்முகத்திற்கு தலைமைச் செயலாளராக  கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.      

கிரிஜா வைத்யநாதன் உடல்நலம் பெற்று திரும்பும் வரை சண்முகம் அந்தப் பொறுப்பினைக் கவனிப்பார்  என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

SCROLL FOR NEXT