தமிழ்நாடு

சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை

சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை புதன்கிழமை சோதனை நடத்தியது.

Raghavendran

சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் 2வது முறையாக வருமானவரித்துறை புதன்கிழமை சோதனை நடத்தியது. 

படப்பையில் உள்ள மிடாஸ் மற்றும் அதன் அருகில் உள்ள ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ், கோவை மயிலேரிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி உள்ளிட்ட 6 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது.

முன்னதாக, சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித் துறையினர் நவம்பர் 9,10 ஆகிய தேதிகளில் சோதனை நடத்தினர். 

ஒரே நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 200 இடங்களில் அதிரடியாக நடைபெற்ற இந்தச் சோதனைகளில் வருமான வரித்துறையைச் சேர்ந்த 1800 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 

இதில், 200-க்கும் மேற்பட்ட தனியார் வாகனங்களை அதிகாரிகள் பயன்படுத்தினர். இதில், ஜெயா தொலைக்காட்சி அலுவலகம் மற்றும் சசிகலா குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோரது இடங்களில் இச்சோதனை நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெஸ்டோன் கோப்பையை வென்ற மெஸ்ஸி மகன்..! வைரலாகும் ‘துப்பாக்கி வீரன்’ கொண்டாட்டம்!

வரம் தரும் வாரம்!

நைஜீரியாவில் கால்நடைகளுக்காக 33 பேரைக் கொன்ற ஆயுதக்குழு!

முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

பொன், பொருள் அருளும் பொங்கு சனி பகவான்

SCROLL FOR NEXT