முகப்பு
தமிழ்நாடு

உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகள் ரகசியமாக திருத்தியமைப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகளை ரகசியமாக திருத்தியமைப்பது ஜனநாயக விரோத செயல் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகளை ரகசியமாக திருத்தியமைப்பது ஜனநாயக விரோத செயல் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் கடந்த ஓராண்டாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிலையில், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வார்டுகளின் எல்லைகளை அரசு திருத்தி அமைத்துள்ளது. இதனை வெளிப்படையாகச் செய்யாமல், மிக ரகசியமான முறையில் தயாரித்துள்ளது. தங்களுடைய கட்சி வெற்றி பெறுவதற்கேற்ற வகையில் வார்டுகளை ரகசியமான முறையில் அமைத்துக் கொள்ள அரசு முடிவு எடுத்திருப்பது ஜனநாயக விரோத செயலாகும். இதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கின்றது. இதை வெளிப்படையாக அறிவித்து, அனைவரும் கருத்துகளைத் தெரிவிக்க போதுமான அவகாசம் அளித்து, அதன் பின்னரே இறுதி வரையறைகளை அரசு வெளியிட வேண்டும் என இரா. முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →