சித்தூர் அருகே நள்ளிரவு விபத்து: பெண்கள் உள்பட 5 பேர் சாவு
சித்தூர் அருகே புதன்கிழமை நள்ளிரவு கர்நாடக அரசுப் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
சித்தூர் அருகே புதன்கிழமை நள்ளிரவு கர்நாடக அரசுப் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூருலிருந்து திருப்பதி நோக்கி அந்த மாநில அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது.
சித்தூர் மாவட்டம், பங்காருபாளையம் மண்டலம் கே.ஜி. சத்திரம் என்ற இடத்தில் நள்ளிரவு வந்தபோது திருமலையிலிருந்து மைசூர் நோக்கி பக்தர்கள் சென்ற வேனும், கர்நாடக அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் டெம்போவில் பயணம் செய்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பா (38), நிஷா (22), முன்னி (18) உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 11 பேர் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு பங்காருபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பங்காருபாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.