சென்னையில் ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்ற தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
சென்னையில் ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னையில் ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னையில் 36 இடங்களில் உள்ள குடிசைகளை அகற்ற இடைக்கால தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண்ணுரிமை இயக்கம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சென்னையில் ஆக்கிரமிப்பு குடிசைகளை நீக்க இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்ட நீதிமன்றம் இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில்தர உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம்.