திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் காயம்
வைகுண்ட ஏகாதசியான இன்று திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடுதிருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் காயம்
வைகுண்ட ஏகாதசியான இன்று திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பதி: வைகுண்ட ஏகாதசியான இன்று திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் இன்று வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், 108 திவ்ய தேசங்களுள் ஒன்றான திருப்பதியில் இன்று காலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
இன்றை தினம் நடைபாதை தரிசனம் ரத்த செய்யப்பட்டது. இந்நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் கூடியதால் வரிசையில் பக்தர்களுக்கிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால், சிலர் மயக்கமடைந்தனர். மேலும், சிலருக்குப் பலத்த காயம் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்கும் அறைகள் கிடைக்காமல் பலர் சாலையில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பக்தர்களுக்கு குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர கிடைக்கவில்லை என்று தேவஸ்தானம் மீது குற்றம் சாற்றியுள்ளனர்.