தமிழ்நாடு

நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர்  கைது! 

ஞாயிறு அதிகாலை நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

DIN

ராமேஸ்வரம்:  ஞாயிறு அதிகாலை நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரத்தினை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஞாயிறு அதிகாலை தங்களது படகுகளில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.  அப்பொழுது அங்கே கடலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், அங்கிருந்த தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி கடுமையாகத் தாக்கினர். இதனைத் தொடர்ந்து ராமேஸ்வர மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இலங்கை கடற்படையின் கொடூர தாக்குதலின் காரணமாக தமிழக மீனவர்களின் மீன்பிடி சாதனங்கள் கடுமையாக சேதமடைந்தன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடகங்களின் முன்னோடி !

நிறுத்தம் தேடும் நகரம் !

தொடரும் மரண தண்டனை சர்ச்சை...

இன்று பாராட்டு பெறப்போகும் ராசி எது? தினப்பலன்கள்!

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: பிப். 18-இல் தாக்கல்

SCROLL FOR NEXT