தமிழ்நாடு

காலவரையின்றி பேரவை ஒத்திவைப்பு

DIN

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை மறுதேதி குறிப்பிடாமல் பேரவைத் தலைவர் ப.தனபால் புதன்கிழமை காலவரையின்றி ஒத்திவைத்தார்.
2017-ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையுடன் ஜனவரி 23-ஆம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரை மீதான எதிர்க்கட்சியினரின் விவாதங்கள் மூன்று நாள்கள் நடைபெற்றன. சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்துகளுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை பதிலுரை வழங்கினார். தமிழக அரசின் 10 சட்டமசோதாகள் நிறைவேற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து பேரவையை ஒத்திவைக்கும் தீர்மானத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்து அது நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பேரவையை மறுதேதி குறிப்பிடாமல் பேரவைத் தலைவர் தனபால் ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT