தமிழ்நாடு

பன்றிக் காய்ச்சல்: புதுவையில் மேலும் ஒருவர் சாவு

DIN

புதுவையில் பன்றிக் காய்ச்சலால் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
புதுவையில் பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. கோரிமேடு அரசு மருத்துவமனை, ஜிப்மர் ஆகியவற்றில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே புதன்கிழமை அரியாங்குப்பத்தைச் சேர்ந்த ஒருவர் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு, ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வியாழக்கிழமை உயிரிழந்தார்.
புதுவை முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த தயாளன், பனித்திட்டு பகுதியைச் சேர்ந்த பானுமதி, பெரிய காலாப்பட்டு முருகன் ஆகியோர் கடந்த வாரம் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.
இந்த நிலையில், மேலும் மூவர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT