தமிழ்நாடு

இன்போசிஸ் பெண் மென்பொறியாளர் கொலை: சென்னையில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

DIN

சென்னை: புனே இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் மென்பொறியாளர் ரஸிலா ராஜூ, கடந்த இரு தினங்களுக்கு முன்பு அலுவலகத்திற்குள்ளே கொலை செய்யப்பட்டார். இதனிடையே சென்னை சோழிங்கநல்லூரில் பணிப்புரியும் இன்போசிஸ் ஊழியர்கள் மறைந்த ரஸிலா ராஜூ மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர். அப்போது, தகவல்தொழிற்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லையென பெண் ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள இன்போசிஸ் அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் பொறியாளர் ரஸிலா ராஜூ கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அலுவலகத்திற்குள் கொலை செய்யப்பட்டார். அவரை ஒப்பந்த ஊழியர் ஒருவரே கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே, சென்னை சோழிங்கநல்லூரில் பணிப்புரியும் தகவல் தொழிற்நுட்ப ஊழியர்கள் மறைந்த ரஸிலா ராஜூ மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஊழியர்கள், நிர்வாகத்தின் அலட்சியத்தால் அலுவலகத்திலேயே பெண் ஊழியர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை சம்பவம் தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தலையிட்டு விசராணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  
மேலும், உமா மகேஸ்வரி, சுவாதியை தொடர்ந்து, தற்போது ரசிலா ராஜு என கொலை தொடருவதால், ஐ.டி.நிறுவனங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதையே காட்டுவதாக குற்றம்சாட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT