தமிழ்நாடு

எண்ணூர் அருகே விபத்துக்குள்ளான கப்பல்கள் சிறைபிடிப்பு

DIN


சென்னை: எண்ணூர் அருகே விபத்துக்குள்ளான இரண்டு கப்பல்களையும் இந்திய கடலோர பாதுகாப்புப் படை சிறைபிடித்தது.

சென்னைக்கு அருகே கடலில் டான் காஞ்சிபுரம் மற்றும் எம்.பி.டபிள்யூ. கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில், ஏராளமான எண்ணெய் கடலில் கலந்தது. இதனால் கடல் மாசடைந்து, ஏராளமான நீர் வாழ் உயிரினங்கள் பலியாகின.

பல்வேறு கடற்கரைப் பகுதிகளில் எண்ணெய் படலத்தை அகற்றும் பணி கடந்த 3 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு மீனவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கு விசாரித்த உயர் நீதிமன்றம், கப்பல்களை சிறைபிடிக்குமாறு உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து கப்பல்களை சிறைபிடித்து இந்திய கடலோர பாதுகாப்புப் படை நடவடிக்கை எடுத்துள்ளது.

எண்ணூர் துறைமுக எல்லைக்குள் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை இரண்டு கப்பல்களும் விடுவிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT