பிரபல எழுத்தாளர் க.சீ. சிவகுமார் நேற்று மாலை, பெங்களூருவில் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு வயது 46.
திருப்பூர், சின்ன தாராபுரம் அருகே கன்னிவாடி கிராமத்தைச் சேர்ந்த க.சி. சிவகுமார், பத்திரிகைகளில் பணியாற்றியவர். ஏராளமான சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ள க.சீ சிவகுமார், கன்னிவாடி ஆதிமங்கலத்து விசேஷங்கள், குணச்சித்தர்கள், உப்புக் கடலை குடிக்கும் பூனை உள்ளிட்ட குறுநாவல்களையும் எழுதியுள்ளார்.
150க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிய இவர் சிறந்த சிறுகதைக்கான இலக்கிய சிந்தனை விருதையும் பெற்றவர்.
பெங்களூருவில் தான் வசித்து வந்த குடியிருப்பு தளத்தில் 2வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் அவர் மரணம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.