தமிழ்நாடு

அரசு நிலங்களில் 26 ஹெக்டேரில் சீமைக் கருவேலம் அழிப்பு

DIN

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட அரசு நிலங்களில் 26 ஹெக்டேர் பரப்பில் வளர்ந்திருந்த சீமைக் கருவேல மரங்கள் வேருடன் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. தனியார் நில உரிமையாளர்களுக்கு பிப்.7ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
நிலத்தடி நீராதாரத்துக்கும், விவசாயத்துக்கும் பெரிதும் கேடு விளைவிக்கும் சீமைக் கருவேல மரங்களை வேருடன் முழுமையாக அழிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இதன்படி, திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் சீமைக் கருவேல மரங்களை வேருடன் அப்புறப்படுத்தி அழிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணிகளை திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிபதி கே. ராஜசேகர், முதல்கட்டமாக ஆய்வு செய்து அறிக்கை அளித்தார். இதன் தொடர்ச்சியாக, நீதிமன்றம் மூலம் வழக்குரைஞர் ஆணையத்தை நியமித்து திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், அழிக்கப்படாமல் உள்ள மரங்கள் குறித்த புகைப்படம், விடியோ பதிவு, மக்கள் கருத்து ஆகியவற்றைப் பதிவு செய்து முழுமையாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இதற்காக, மாவட்ட வழக்குரைஞர் ஆணையத் தலைவர் டி. சீனிவாசராகவன் தலைமையில் ஆணையக் குழு அமைக்கப்பட்டது.
இதன்படி, ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆர்.ஜே. கார்த்திக், ஜே. அசோக், ஐ. பினாய்காஷ், நவநீதராஜா ஆகியோர் மேற்பார்வையில் தனித் தனி குழுக்களாகச் சென்று மாநகரப் பகுதிகளை கடந்த 2 நாள்களாக முழுமையாக தணிக்கை செய்தனர்.
பாளையங்கோட்டை, அண்ணா நகர், செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் அரசு நிலங்களில் 26 ஹெக்டேரில் வேருடன் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.
மாநகரப் பகுதிகள் மட்டுமல்லாது, ஆலங்குளம், கீழப்பாவூர், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், மானூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம், பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், பாப்பாக்குடி, கடையம், நான்குனேரி, ராதாபுரம், வள்ளியூர், களக்காடு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிப் பகுதிகளையும் முழுமையாக தணிக்கை செய்தனர்.
இந்த தணிக்கையின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ம.க. குழந்தைவேல், மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கனகராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் பாஸ்கரன், கோட்டாட்சியர்கள் ராமசுப்பிரமணியன், வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT