தமிழ்நாடு

கழுத்தை நெரித்து சிறுமி கொலை

DIN

ராணிப்பேட்டை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் அருகே உள்ள வேலம்
புதூர் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராதா (37), விவசாயத் தொழிலாளி. இவரது கணவர் லட்சுமணன், கடந்த 2006-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இவர்களுக்கு மணி (19), தேவன் (14) ஆகிய இரு மகன்களும், ஆர்த்தி (10) என்ற மகளும் ஆக 3 குழந்தைகள். ஆர்த்தி நடப்பாய் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் தாய் ராதா, மகன் தேவனுடன் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச ஞாயிற்றுக்கிழமை சென்று விட்டார். மகள் ஆர்த்தி, அருகே வசிக்கும் பெரியம்மா முத்துலட்சுமியுடன் அம்மூரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவு 10 மணியளவில் வீடு திரும்பி தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு 11 மணியளவில் தாயும், அண்ணனும் வீட்டிற்கு வந்து கதவைத் திறந்து பார்த்த போது கட்டிலுக்கு அடியில் ஆர்த்தி கழுத்தை சணல் கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தார். அவர் காதில் அணிந்திருந்த கம்மலும், பீரோவில் இருந்த ரூ.10,000 ரொக்கமும் திருட்டு போனது தெரிய
வந்தது.
இது குறித்து தகவலறிந்த ஏடிஎஸ்பி உமாசங்கர், ராணிப்பேட்டை டிஎஸ்பி விஜயகுமார், காவல் ஆய்வாளர் ராஜாங்கம் மற்றும் போலீஸார் கைரேகை நிபுணர், மோப்ப நாயுடன் விரைந்து வந்தனர். ஆர்த்தியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்தும், சிறுமியின் மூத்த அண்ணன் மணி மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT