தமிழ்நாடு

ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை: மருத்துவர் ரிச்சர்ட் பீலே!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே தெரிவித்தார்.

DIN

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னைஅப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையளித்த இங்கிலாந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலே, அப்பல்லோ மருத்துவர்கள் பாலாஜி மற்றும் பாபு ஆகியோர் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்பொழுது ஜெயலலிதாவின் மரணத்தில் மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்கள் குறித்து கேட்கப்பட்ட  கேள்விக்கு மருத்துவர் ரிச்சர்ட் பீலே பதில் அளித்து கூறியதாவது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் தினசரி விளக்கமளிக்கபப்ட்டது. இது குறித்த சந்தேகங்கள் நியாயமானவை அல்ல. 

இவ்வாறு  அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிவேகம், குறைந்த வயதில் 880 கோல்கள்..! மெஸ்ஸி புதிய சாதனை!

ஆஸி.க்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

திமுக முப்பெரும் விழா தொடங்கியது! கனிமொழிக்கு பெரியார் விருதை வழங்கினார் ஸ்டாலின்!

சவுதி அரேபியா சென்ற பாக். பிரதமர்! ஒரே வாரத்தில் 3வது முறையாக மத்திய கிழக்கு பயணம்!

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

SCROLL FOR NEXT