தமிழ்நாடு

பெண்களைக் கவரும் திட்டங்களில் முதல் கையெழுத்திடுகிறார் சசிகலா!

DIN

சென்னை: தமிழக முதல்வராக வி.கே.சசிகலா பதவியேற்கும் நிகழ்ச்சி வரும் 9 ஆம் தேதி நடைபெறும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக கட்சியின் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலா நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து தமிழக முதல்வராக வி.கே.சசிகலா பதவியேற்கும் நிகழ்ச்சி வரும் 9 ஆம் தேதி அல்லது நாளை செவ்வாய்க்கிழமை (பிப்.7) பதவியேற்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லியிலிருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை திரும்பியதும் பதவியேற்பு விழா முழுவீச்சில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த சில முக்கியத் திட்டங்களுக்கான கோப்புகளில் அவர் கையெழுத்திடுவார். பெண்களைக் கவரும் வகையிலான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க முடிவு செய்யப்பட்டு கோப்புகள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT