தமிழ்நாடு

மர்மக் காய்ச்சல்: மேலும் 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

DIN

மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் திருவள்ளூர் அரசுப் பொதுமருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்
பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மர்மக் காய்ச்சலுக்கு 20-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதையடுத்து கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் கொசு மருந்து, பிளீச்சிங் பவுடர் தொடர்ந்து அடிக்கப்பட்டும், நில வேம்புக் குடிநீர் அளித்தும் மர்மக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்
பட்டது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மீண்டும் மர்மக் காய்ச்சல் பரவி உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டியில் காய்ச்சல் பாதித்த 3 பேர் இறந்துள்ளனர்.
தற்போது திருவள்ளூரை அடுத்த காக்களூரைச் சேர்ந்த குமரேசன், திருநின்றவூரைச் சேர்ந்த ரஞ்சித் ஆகிய இருவரும் சளி மற்றும் காய்ச்சலால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருவருக்கும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனை ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT