தமிழ்நாடு

மேட்டூர் அனல் மின் நிலைய 3-ஆவது யூனிட்டில் உற்பத்தி தொடக்கம்

DIN

மேட்டூர் அனல் மின் நிலைய 3-ஆவது யூனிட்டில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில், தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு பிரிவுகளும், 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு பிரிவும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். கடந்த 4-ஆம் தேதி 210 மெகாவாட் திறன் கொண்ட பிரிவில், 3-ஆவது யூனிட்டில் கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி தடைப்பட்டது. செவ்வாய்க்கிழமை பழுது சரிசெய்யப்பட்டதையடுத்து, 3-ஆவது யூனிட்டில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

SCROLL FOR NEXT