தமிழ்நாடு

தொழிற்கல்வி படிப்புகளில் துணை ராணுவப் படையினரின் குழந்தைகளுக்கும் உரிய இட ஓதுக்கீடு: அரசு உரிய முடிவெடுக்க உத்தரவு

DIN

தமிழகத்தில் தொழிற்கல்வி படிப்புகளில், ஓய்வு பெற்ற துணை ராணுவப் படையினரின் குழந்தைகளுக்கு வரும் 2017-18-ஆம் கல்வியாண்டில் இருந்தே இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உரிய முடிவுகளை எடுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்புப் படை வீரர் பி.சாந்தகுமார் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனு விவரம்: தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு வழங்குவதைப் போல, ஓய்வு பெற்ற துணை ராணுவப் படை வீரர்களின் குழந்தைகளுக்கும் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு வழங்கப்படுவது போல, துணை ராணுவப் படை வீரர்களின் குழந்தைகளுக்கும் இடஒதுக்கீடை வழங்க வேண்டும் என, கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுபற்றி தமிழக அரசுக்கு மனு அளித்தும் எந்தப் பதிலும் இல்லை என்றார்.
இதை ஏற்ற நீதிபதிகள், மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையில் முடிவை எடுக்க வேண்டும் என்றும், சலுகையை வரும் 2017-18-ஆம் கல்வியாண்டில் இருந்தே வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

பூா்ண புஷ்கலா அய்யனாா் கோயில் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

தகவல் உரிமை சட்டம்: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை

திரெளபதி அம்மன் கோயில் உற்சவம் பூச்சொரிதலுடன் தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் 93.08 சதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT