தமிழ்நாடு

'போயஸ்தோட்ட இல்லம் ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றப்படும்'

DIN

சென்னையிலுள்ள போயஸ் தோட்ட இல்லம் ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இதுதொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்ட இல்லம் அவரின் நினைவு இல்லமாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.
புதிய கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை. அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே நான் முதல்வராகப் பொறுப்பு ஏற்பேன்.
2012-க்குப் பிறகு சசிகலாவிடம் நான் பேசியதே இல்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்குப் பிறகே அவரிடம் பேசினேன். ஜெயலலிதா கூறிய பணிகளை மட்டுமே செய்து வந்தேன். ஜெயலலிதா தனது அரசியல் வாரிசாக யாரையும் அடையாளம் காட்டவில்லை.
ஆளுநரைச் சந்திப்பேன்: ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னைக்கு வியாழக்கிழமை (பிப்.9) வந்தவுடன் அவரைச் சந்திப்பேன் என்றார் பன்னீர்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT