தமிழ்நாடு

எம்.எல்.ஏ.க்கள் மனசாட்சிப்படி நடந்துகொள்ள வேண்டும்

DIN

எம்.எல்.ஏ.க்கள் மனசாட்சிப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டி.ராஜேந்தர் கூறினார்.
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதைக் கண்டித்து, லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கோவையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் டி.ராஜேந்தர் பங்கேற்றார். இதில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கேரள அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து, டி.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பவானி ஆற்றின் குறுக்கே ஆறு இடங்களில் அணைகள் கட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதில், இரு இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் சூழ்நிலை ஏற்படும். ஆகவே, கேரள அரசுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் போராட வேண்டும்.
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது உள்கட்சி விவகாரம். ஆனால், சசிகலா முதல்வராகக் கூடாது என்பது தமிழக மக்களின் பிரார்த்தனையாக உள்ளது. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மனசாட்சிப்படியும், சுய உணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் முதல்வர் பன்னீர்செல்வம் சிரித்துப் பேசியது தவறு என்று சசிகலா கூறுவது ஏற்புடையதாக இல்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT