தமிழ்நாடு

சிறுமி பலாத்காரம்: செங்கல் சூளை தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை: கரூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

DIN

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், செங்கல் சூளைத் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் குப்பன். இவரது மகன் தமிழரசன் (22). குப்பன் தனது குடும்பத்தினருடன் கரூர் உப்பிடமங்கலம் அருகே மேலலட்சுமணம்பட்டியில் உள்ள செங்கல்சூளையில் தங்கி வேலை பார்த்து வந்தார். இதே சூளையி,ல் விழுப்புரம் மாவட்டம், பில்ரம்பட்டு பகுதியைச் சேர்ந்த கோபால் தனது மனைவி, மகளுடன் கூலி வேலை செய்து வந்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனியாகப் பேச வேண்டும் எனக் கூறி, வீட்டில் தனியாக இருந்த கோபாலின் 16 வயது மகளை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்ற தமிழரசன், திருமண ஆசை காட்டி அவரைப் பலாத்காரம் செய்தாராம். மேலும், நடந்ததை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதால் பயந்து போன அச்சிறுமி, தனது தாய் பரமேஸ்வரியிடம் அன்று இரவு நடந்ததைக் கூறினார்.
இதையடுத்து வெள்ளியணை போலீஸில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தமிழரசனைக் கைது செய்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வியாழக்கிழமை இந்த வழக்கை விசாரித்த மகளிர் விரைவு நீதிமன்ற அமர்வு நீதிபதி எம். குணசேகரன் குற்றவாளி தமிழரசனுக்கு குழந்தைகளை பாலியல் வன்முறையில் இருந்து தடுக்கும் சட்டத்தின் கீழ் (போக்சோ) 10 ஆண்டு சிறை, ரூ.1000 அபராதம், சிறுமியை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததற்காக 10 ஆண்டு சிறை, ரூ.1000 அபராதம் விதித்தார். அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து, தமிழரசனை போலீஸார் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT