தமிழ்நாடு

ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார்: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி

DIN

நல்ல முடிவை ஆளுநர் எடுப்பார் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி தெரிவித்தார்.
சென்னையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்த பின்னர், பொன்னுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
அதிமுக தலைமை அண்மையில் அழைத்து மாநிலங்களவை உறுப்பினராக அனுப்ப முடியவில்லை என்பதால், புதுதில்லி சிறப்பு பிரநிதியாக அனுப்புவதாக கூறி கடிதம் எழுதி வாங்கினார்கள்.
இந்த நிலையில், மக்களின் நலன் பாதுகாக்க இறைவன் தீர்மானித்து ஓ.பன்னீர்செல்வத்தை அனுப்பி வைத்துள்ளதை பொதுமக்கள் வரவேற்கிறார்கள். அவருக்கு அதிமுக எம்எல்ஏக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.
அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். பணத்துக்காகவும், பதவிக்காகவும் பதுங்கியிருக்க வேண்டாம். யாருடைய பேச்சையும் கேட்காமல் மனசாட்சிப்படி நினைத்துப் பார்த்தால், நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அமைச்சரவையில் நானும் (பொன்னுசாமி), ஆளுநர் வித்யா சாகர் ராவும் அமைச்சர்களாக இருந்தோம்.
நேர்மையாகவும், நிதானமாகவும் செயல்படக் கூடியவர் ஆளுநர் மக்களுக்கு எது நல்லது என்பதை யோசித்து முடிவு எடுப்பார். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடு இருப்போம் என்றார் பொன்னுசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT