தமிழ்நாடு

சசிகலா அரசு மற்றும் தனியார் நிலங்களை ஆக்ரமித்திருப்பதாக டிஜிபியிடம் புகார் மனு

DIN

சென்னை: அரசு மற்றும் தனியார் நிலங்களை ஆக்ரமித்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீது தமிழக டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சசிகலாவும், அவரது உறவினர்களும் கடந்த 20 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் நிலங்களை ஆக்ரமித்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூர், பையனூர், கருங்குழிப்பள்ளம் ஆகிய இடங்களில் 112 ஏக்கர் நிலத்தை சசிகலாவும், அவரது உறவினர்களும் ஆக்ரமித்திருப்பதாக அதில் புகார்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களின் நிலங்களை அவர்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT