தமிழ்நாடு

சென்னையில் வாகன நிறுத்த வசதி இல்லாத விடுதிகளை உடனே மூட உயர் நீதிமன்றம் உத்தரவு!

DIN

சென்னை: சென்னையில் வாகன நிறுத்த வசதிகள் இல்லாத விடுதிகளை உடனே மூட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த லோகு என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில் அவர் சென்னையைச் சேர்ந்த பெரும்பாலான தங்கும் விடுதிகளில் வாகனங்களை நிறுத்தும் வசதி இல்லை. இதன் காரணமாக வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த பொழுது இது தொடர்பாக பலமுறை விடுதிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவை சற்றும் இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கவில்லை. எனவே சென்னையில் வாகன நிறுத்த வசதிகள் இல்லாத விடுதிகளை உடனே மூட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT