தமிழ்நாடு

புதுவை அதிமுக எம்எல்ஏக்கள் திடீர் ஆலோசனை

DIN

தமிழக அதிமுக நிலவரம் குறித்து, புதுவையைச் சேர்ந்த அந்தக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சனிக்கிழமை திடீரென ஆலோசனை நடத்தினர்.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னைக் கட்டாயப்படுத்தி, முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வைத்ததாகப் புகார் கூறினார்.
அதே நேரத்தில், அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, சசிகலா முதல்வராகப் பதவியேற்க முயற்சித்து வருகிறார்.
இந்த நிலையில், அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர்.
அதே நிலை, புதுவையிலும் தொடர்கிறது. புதுவை அதிமுகவிலும் இரு அணிகளுக்கும் மாறி, மாறி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த புதுவை சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோர் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
இதில், சசிகலா தரப்புக்கு ஆதரவு அளிப்பதா? பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவு அளிப்பதா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
ஆலோசனைக் கூட்டம் முடிந்து வெளியே வந்த அன்பழகன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எம்.ஜி.ஆர். நிறுவிய அதிமுகவை எஃகு கோட்டையாக உருவாக்கியவர் ஜெயலலிதா.
தற்போது அவர் இல்லாத சூழலில், தமிழக அதிமுகவில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது.
தற்போதைய நிலவரம் குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4 பேரும் ஆலோசனை நடத்தினோம். எனினும், ஒட்டுமொத்த நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஆலோசித்து இறுதி முடிவெடுப்போம்.
எந்த முடிவாக இருந்தாலும், அது கட்சியின் நலன் கருதியே இருக்கும் என்றார் அவர். ஏற்கெனவே, அவர்கள் 4 பேரும் சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT