தமிழ்நாடு

முன்னாள் அமைச்சரிடம் நூதன மோசடி

DIN

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தியிடம் ரூ.1.70 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக, போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடலாடி தாலுகா, மேலச்செல்வனூர் கிராமத்தில் வசித்து வருபவர் முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி. இவர், தற்போது திமுக தீர்மானக் குழு மாநில துணைச் செயலராக உள்ளார்.
இவரது செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் இருவர், தங்களை வங்கி ஊழியர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் அவர்கள், அவரது ஏ.டி.எம். கார்டுக்குரிய நாள்கள் காலாவதி ஆகிவிட்டதாகவும், அதை புதுப்பிக்க அதன் எண்ணைத் தெரிவிக்குமாறும் கூறினர்.
இதை நம்பிய அவர், அந்த எண்ணைத் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அவரது கணக்கில் இருந்த ரூ.1,70,285 இணையம் மூலமாக திருடப்பட்டது.
இதுகுறித்து தெரியவந்ததும், கடலாடி காவல் நிலையத்தில் சத்தியமூர்த்தி புகார் அளித்தார்.
அப்புகாரில் 7255807163 என்ற செல்லிடப்பேசி எண்ணிலிருந்து தான் வங்கி ஊழியர்கள் பேசியது போல அந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம். எண்ணைக் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். புகாரின் பேரில், கடலாடி காவல் ஆய்வாளர் முத்துராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT