தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு எம்எல்ஏ, எம்பி ஆதரவு

DIN

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மதுரை தெற்கு எம்எல்ஏ எஸ்.எஸ். சரவணன், மதுரை எம்பி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், அவரை ஆதரிக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரை சரவணன் திங்கள்கிழமை இரவு சந்தித்து, தனது ஆதரவை தெரிவித்தார். முன்னதாக, மதுரை மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணனும் ஆதரவை தெரிவித்தார்.
இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:-
மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்துள்ளேன். ஒன் ஜி என்றால் எம்ஜிஆர், 2 ஜி என்றால் ஜெயலலிதா, 3 ஜி என்றால் ஓ.பன்னீர்செல்வம்தான். மக்களின் செல்வாக்கு அவருக்குத்தான் உள்ளது.
தில்லிக்கு சென்று ஜல்லிககட்டுக்குச் சட்டம் இயற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார். ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய மாணவர்களின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது. ஓர் உன்னத தொண்டன்தான் அதிமுகவை ஆள வேண்டும். அது ஓ.பன்னீர்செல்வம்தான் என்றார்.
இதுவரை ஆதரவு தெரிவித்துள்ளோர்: அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜன், எம்எல்ஏக்கள் எஸ்.பி.சண்முகநாதன், மாணிக்கம், மனோரஞ்சிதம், மனோகரன், ஆறுகுட்டி, சரவணன் ஆகியோரும், எம்.பி.க்கள் மைத்ரேயன், அசோக்குமார், சுந்தரம், சத்தியபாமா, வனரோஜா, செங்குட்டுவன், ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, மருதை ராஜா, ராஜேந்திரன், பார்த்திபன், லட்சுமணன், கோபாலகிருஷ்ணன் ஆகிய 12 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சேதுராமன் ஆதரவு: மேலும், மூவேந்தர் முன்னேற்ற முன்னணி கட்சியின் தலைவர் சேதுராமனும், நடிகர் ராகவா லாரன்ஸþம் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
"மாறுவேடத்தில் தப்பி வந்தேன்'
கூவத்தூரில் அடைக்கப்பட்டிருந்த விடுதியிலிருந்து மாறு வேடத்தில் தப்பி வந்து ஆதரவு தெரிவித்துள்ளேன் என்று மதுரை தெற்கு எம்எல்ஏ சரவணன் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியது:-
கூவத்தூரில் எல்லா வகையிலும் அவமானப்படுத்தப்பட்டேன். அங்கிருந்து மாறுவேடத்தில் தப்பித்து வந்தேன். அதிமுக பொதுச்செயலர் சசிகலா வருவதற்குள் எப்படியும் வந்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு, அதன்படி வந்துள்ளேன்.
தமிழகத்தை ஓ.பன்னீர்செல்வம் ஆளப்போவது உறுதி. 5 நாள்களும் காலை 3 மணியில் இருந்து, இரவு 1 மணி வரை தொலைபேசி மூலமும், வாட்ஸ்-அப் மூலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவியுங்கள் என்று கூறினர். அனைத்து எம்எல்ஏக்களும் வர உள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

களியக்காவிளை அருகே கனரக லாரி மோதி சோதனைச் சாவடி சேதம்

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீசுடலைமாடசாமி கோயில் கொடைவிழா

ஒப்பந்தம் - பொது அதிகாரத்துக்கான முத்திரைக் கட்டண உயா்வு அமல்

மின்கம்பம் நடுவதற்கு கட்டணம் கேட்ட இளநிலைப் பொறியாளா் இடைநீக்கம்

நெல்லையில் 106.3 டிகிரி வெயில்

SCROLL FOR NEXT