தமிழ்நாடு

'ஓர்மைத்திறனால் நாட்டை மீட்டெடுத்த வீரத்துறவி விவேகானந்தர்'

DIN

ஓர்மைத்திறனால் நாட்டை மீட்டெடுத்தவர் சுவாமி விவேகானந்தர் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.
விவேகானந்த நவராத்திரி பிப்ரவரி 9 முதல் 14-ஆம் தேதி வரை சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்றது. நிறைவு விழாவில், அவர் பேசியதாவது:-
சுவாமி விவேகானந்தர் வந்துசென்ற இடத்தில் பேசுவதில் பெருமை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இதயத்துக்கு மிகவும் உகந்த இடம் விவேகானந்தர் இல்லமாகும்.
ஓர்மைத்திறனில்..: இந்தியாவின் கலாசாரம், யோக நெறிகள், பண்பாடு, கல்வி முறையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் சுவாமி விவேகானந்தர். ஆனால், அவர் கன்னியாகுமாõக்குச் சென்று பாறையில் தவம் இயற்றினார்.
சிகாகோவில் ஆன்மிகப் பேருரை உரைக்கு பின்னர் துப்பாக்கி சுடும் போட்டி நடக்கும் இடத்துக்கு காவி உடையில் செல்கிறார். அங்குள்ள போட்டியாளர்களுக்கு மத்தியில் துப்பாக்கி எடுத்து இலக்கு நோக்கி துல்லியமாக சுடுகிறார். இதை பார்த்தோர், "எவ்வாறு உங்களால் துல்லியமாக செயல்பட முடிந்தது' என கேட்கின்றனர். அதற்கு அவர், "இலக்கு, கவனம், மனம் ஆகியன ஓர்மையுடன் வரும்போது அனைத்தும் சாத்தியப்படும்' என்கிறார்.
அந்த வகையில், "உடல், உள்ளம், மனம் ஆகியன இணையும்போது ஓர்மைத்திறனில் நன்கு செயல்பட முடியும். இதனையே, யோகம்' என்கிறார் சுவாமிஜி.
நாட்டை மீட்டெடுத்தவர்..: அதுபோல், அவர் எப்போதும் ஓர்மைத்திறன், கண்ணியத்தில் செயல்பட்டவர். அதனால், தேசம், வரலாறு, கலாசாரம் உள்ளிட்ட பழம்பெரும் பெருமைகளை மீட்டெடுத்தவர். அந்தவகையில், மகாகவியும், சுவாமிஜியும் ஒரே மாதிரி செயல்பட்டவர்கள். இதில், "விசையுறு பந்தினைபோல் உள்ளம் வேண்டியபடி சொல்லும் உடல் கேட்டேன்' என்றார் பாரதி. அதைப்போலவே சுவாமிஜியும் "உடலை மனதை உறுதி செய்' என்றார்.
விழாவில், விவேகானந்தர் பண்பாட்டு மையம் இயக்குநர் சுவாமி சசிசிகானந்தர், சக்தி குழுமத் தலைவர் ம.மாணிக்கம், எஸ்.எம். சில்க்ஸ் நிறுவனர் எஸ்.மனோகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவையொட்டி, அன்னமாச்சார்யா பஜன் மண்டலி இசை நிகழ்ச்சியும், தாமரைக்கண்ணன் எனும் தலைப்பில் உ.வே.துஷ்யந்த் ஸ்ரீதர் கதை கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT