தமிழ்நாடு

வெப்பச் சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

DIN

வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில் புதன்கிழமை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை ஜனவரி 4 -ஆம் தேதி நிறைவு பெற்றதெனஅறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வங்கக் கடலில் உருவான பலவீனமான காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக தமிழகத்தில் சில நாள்கள் பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில் தமிழகத்தில் புதன்கிழமை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
வெப்பச் சலனத்தின் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென்தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதேசமயம் வடதமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

SCROLL FOR NEXT