தமிழ்நாடு

தினகரனுக்கு பதவி: எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ராஜினாமா!

DIN

திருநெல்வேலி: சசிகலாவின் உறவினர் டி.டி.வி தினகரனுக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தனது உறவினர்  டி.டி.வி தினகரனை துணை பொதுச்செயலாளர் பதவியில் நியமித்து பொதுச்செயலாளர் சசிகலா இன்று காலை உத்தரவிட்டார்.

இது தொடர்பாக இன்று நெல்லையில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அதிமுக துணை பொதுச்செயலாளராக சசிகலாவின் உறவினர் டி.டி.வி தினகரன் நியமிக்கப்பட்டிருப்பது வருத்தம் தருகிறது. இதனால் எனது அமைப்பு செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன். 

தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் வார்தா புயல், ஜல்லிக்கட்டு போன்ற விவகாரங்களில் சிறப்பாக செயல்பட்டார்.

மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பளிக்கும் கட்சியில் இணைந்து செயல்பட எண்ணுகிறேன். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து. ஆதரவாளர்களிடம் ஆலோசித்து முடிவெடுப்பேன்.

இவ்வாறு கருப்பசாமி பாண்டியன் தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT