தமிழ்நாடு

சிறையில் சசிகலா கேட்ட வசதிகளும்; கிடைத்த ஏமாற்றமும்

DIN


பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.

நேற்று மாலை நீதிமன்றத்தில் சரணடைந்த இவர்கள் மூவரையும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு சிறையில் அடைத்து நீதிபதி அஸ்வத் நாராயணா உத்தரவிட்டார்.

அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு, இருவரும் தங்களது உறவினர்களை சந்தித்துப் பேச அனுமதி கோரினர். நீதிபதி அனுமதி அளித்ததை அடுத்து, சிறை வளாகத்தில் இருந்த சசிகலாவின் கணவர் எம். நடராஜன், அண்ணன் பழனியப்பன், சுந்தரவதனத்தின் மகன் டாக்டர் வெங்கடேஷ் மற்றும் இளவரசியின் மருமகன்கள், மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை ஆகியோருடன் இருவரும் சுமார் 15 நிமிஷங்கள் கண் கலங்கியவாறே பேசினர்.

தொடர்ந்து மீண்டும் நீதிபதியின் அறைக்குச் சென்ற இருவரும், தங்களுக்கு அடுத்த இரு வாரங்களுக்கு சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரினர். இதற்கு நீதிபதி ஒப்புக் கொள்ளவில்லை. சசிகலா தனக்கு முதல் வகுப்பும், தனி மருத்துவர் வசதியும் அளிக்கக் கோரினார். ஏற்கெனவே இதே வழக்கில் சிறையில் இருந்தபோது, முதல் வகுப்பு அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். தனி மருத்துவர் வசதி அளிக்க இயலாது, தங்களுக்குத் தேவையான மருத்துவ வசதி சிறை வளாகத்திலுள்ள அரசு மருத்துவமனையிலிருந்து அளிக்கப்படும் என்றார் நீதிபதி. மேலும், ஏற்கெனவே முதல் வகுப்பு பெற்றிருந்தால், அதுகுறித்து சிறைக் கண்காணிப்பாளரிடம் கோரிப் பெறலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

அதேபோல, வீட்டு உணவு பெற்றுக் கொள்வதற்கும் இருவருக்கும் அனுமதி அளிக்கவில்லை. இவற்றைத் தொடர்ந்து இருவரையும் சிறையில் அடைப்பதற்கான ஆவணங்களை பெண் காவலர்களிடம் நீதிபதி அஸ்வத் நாராயணா வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக இருவரும் இதே வளாகத்திலுள்ள பெண்கள் சிறைக்கு மாலை 6.30 மணிக்கு அனுப்பப்பட்டனர்.

சசிகலா, இளவரசி ஆகியோருக்கு பெண்கள் சிறைக்குள் 3 கைதிகள் தங்கும் அறையில் தனித்தனி அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதாவது இவர்கள் ஒவ்வொருவருடனும் 2 பேர் இருப்பார்கள்.

சசிகலாவுக்கு கைதி எண்: 9234, இளவரசிக்கு கைதி எண்: 9235, சுதாகரனுக்கு கைதி எண்: 9236 வழங்கப்பட்டுள்ளது.

இப்போதைக்கு இவர்களுக்கு இரண்டாம் வகுப்பு அறைகளே வழங்கப்பட்டுள்ளன. மின்விசிறி, தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படவில்லை, கட்டில் மட்டும் வழங்கப்படும் என சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT