தமிழ்நாடு

பன்னீர்செல்வம் முதல்வராகக் கோரி இளைஞர் தீக்குளிப்பு

DIN

ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராக வேண்டும் எனக் கூறி, இளைஞர் புதன்கிழமை தீக்குளித்தார்.
காஞ்சிபுரத்தை அடுத்த பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் மூசா (40). கூலித் தொழிலாளி. அதிமுக தொண்டரான இவர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தீவிர ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும், சசிகலா ஆதரவாளர்களுக்கும் இடையே நிலவி வரும் முதல்வர் பதவிக்கான போட்டி காரணமாக, மூசா மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக வேண்டும் எனக் கூறி மூசா புதன்கிழமை இரவு தீக்குளித்தார். இதையடுத்து, அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆறுதல்: இதுகுறித்து தகவல் அறிந்த ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை காலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்று மூசாவையும், அவரது குடும்பத்தாரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையடுத்து, பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடன் போராடி பல பிரச்னைகளில் வெற்றி பெற்றவர். அதே போன்று நாம் தொடங்கியுள்ள தர்ம யுத்தத்திலும் போராடி வெற்றி பெறுவோம். எனவே, தொண்டர்கள் யாரும் இதுபோன்ற தவறான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். மூசா விரைவில் நலமுடன் வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன் என்றார் பன்னீர்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT