தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் நீக்கம்: மதுசூதனன் அறிவிப்பு

DIN


சென்னை: அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன், வெங்கடேஷ் ஆகியோரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் அறிவித்துள்ளார்.

சசிகலா அணியில் இருந்து பிரிந்து பன்னீர்செல்வம் அணிக்குச் சென்றதால், பன்னீர்செல்வம் மற்றும் மதுசூதனனை கட்சியில் இருந்து நீக்குவதாக சசிகலா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அதிமுகவின் தாற்காலிகப் பொதுச் செயலராக சசிகலா பதவியேற்க அக்கட்சியின் விதியில் வாய்ப்பு இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்த நிலையில், சசிகலாவால் தங்களை கட்சியில் இருந்து நீக்க முடியாது என்று பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்தனர்.

மேலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாகக் கூறி, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன், வெங்கடேஷ் ஆகியோரை நீக்குவதாக மதுசூதனன் இன்று அறிவித்துள்ளார்.

அதிமுகவின் நிர்வாகம் யாரிடம் உள்ளது என்ற குழப்பத்தில் தற்போது அதிமுகவினரும், தமிழக மக்களும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT