தமிழ்நாடு

ஆதரிப்பதா? எதிர்ப்பதா..? குழப்பத்தில் காங்கிரஸ்: பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க ராகுல்காந்தி உத்தரவு!

DIN

புது தில்லி: முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்குமாறு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டிருந்தார். இந்த வாக்கெடுப்பு பேரவையில் இன்று காலை 11 மணிக்கு நடக்கயிருக்கிறது. இதற்காக கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் பேருந்து மூலம் இன்னும் சற்று புறப்பட்டு வரவுள்ளனர்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்குமாறு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கட்சி தலைமையிடத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும், கட்சி தலைமை அளிக்கும் ஆலோசனையின் அடிப்படையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்கள். இன்று காலை 9 மணிக்கு மீண்டும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் அதில் முடிவு செய்யப்படும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இதே போல் திமுகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT