தமிழ்நாடு

மேலும் 500 மதுக்கடைகள் மூடல்: 5 முக்கியக் கோப்புகளில் முதல்வர் கையெழுத்து

DIN


சென்னை: தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்பது உள்ளிட்ட 5 முக்கியக் கோப்புகளில் முதல்வர் பழனிசாமி கையெழுத்திட்டார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று தலைமைச் செயலகம் வந்து, முதல்வர் அறையில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பழனிசாமி, உடனடியாக 5 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அதாவது, தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும். கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மகப்பேறு நிதியுதவி 12 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தப்படும்.

வேலையில்லா இளைஞர்களுக்கான  மாதாந்திர உதவித் தொகை இரு மடங்காக உயர்வு. இதன் மூலம் 55,228 இளைஞர்கள் பயனடைவார்கள்.

உழைக்கும் மகளிருக்கு 'அம்மா இருசக்கர திட்டம்' கீழ் இரு சக்கர வாகனம் வாங்க 50 % மானியம் வழங்கப்படும்.  

மீனவர்களுக்கு வீடுகள் கட்ட தனி வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 5 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என்பது உள்ளிட்ட 5 கோப்புகளில் பழனிசாமி கையெழுத்திட்டார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், தமிழகம் முழுவதும் குடிநீர் வசதியை ஏற்படுத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. விரிவான திட்டம் செயல்படுத்தப்படும் என்று பழனிசாமி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT