தமிழ்நாடு

ஜெயலலிதா பிறந்த நாளில் நல உதவிகள்: அதிமுக தலைமை வேண்டுகோள்

DIN

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்த தினத்தையொட்டி, நலத் உதவிகளை வழங்குமாறு அதிமுக தலைமை அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 24) காலை 10 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு அதிமுக அவைத் தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் கட்சியின் நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இதைத் தொடர்ந்து, பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிடப்படுகிறது.
ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்க வேண்டுகோள்: இதனிடையே, அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் அனுமதியுடன் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதிமுகவின் உயர்வுக்கும், சிறப்புக்கும் முழு முதற்காரணமான ஜெயலலிதா இன்று நம்மிடையே இல்லை. ஆனாலும், அவர் நமக்கும், கட்சிக்கும் இனி வரும் தலைமுறைகளுக்கும் வகுத்துத் தந்த பொதுவாழ்வுக்கான வழிமுறைகளும், இலக்கணங்களும் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.
அவரது உழைப்பையும், எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கையும் சூழ்ச்சியும், துரோகமும் சுருட்டிச் செல்ல மேற்கொண்ட கொடுஞ்செயல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன. எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நேரத்தில் அதிமுகவின் ஆட்சி தொடர்வதை உறுதி செய்துள்ளோம்.
மேலும் மக்கள் நலப் பணிகளை தொய்வின்றி ஆற்றி கட்சிக்கும், ஆட்சிக்கும் வலுவும், பொலிவும் சேர்க்கும் மக்கள் நலப் பணிகளை அதிமுகவினர் மேற்கொள்ள வேண்டும்.
ஏழை, எளியோருக்கு பல வகையான நலத் திட்ட உதவிகள் மாணவச் செல்வங்களுக்கு கல்வி தொடர்பான உதவிகள் முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் நற்சுவை உணவு வழங்குதல், இன்னபிற வழக்கமான நல உதவிகளை வழங்குவதோடு எல்லா இடங்களிலும் ஜெயலலிதாவின் படங்களை மக்கள் பார்வைக்கு வைத்து, மலர் அலங்காரம் செய்து கட்சிக் கொடிகளை ஏற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT