தமிழ்நாடு

கடும் பனிப் பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி

DIN

திருத்தணியில் கடும் பனிப்பொழி நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.
திருத்தணியில் கடந்த சில நாள்களாக கடுமையான பனிப் பொழிவு காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் காலை நேரத்தில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திருத்தணி-சித்தூர், திருப்பதி-சென்னை, திருத்தணி-காஞ்சிபுரம் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது. அதேபோல திருத்தணி முருகன் மலைக்கோயில் அருகேயும் பனிப்பொழிவு காணப்படுகிறது.
காலை 9 மணி வரையிலும் பனிமூட்டம் நிலவுவதால், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கின்றனர்.
மார்கழி, தை மாதங்களில் அதிக பனிமூட்டம் காணப்படுவது வழக்கம். ஆனால் தற்போது மாசி மாதம் தொடங்கிய நிலையில், பனிமூட்டம் தொடர்ந்து நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல அதிக பனிமூட்டம் நீடித்தால், மழையளவு குறைய வாய்ப்புள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT