தமிழ்நாடு

சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரிய மனு: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

DIN

சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வுக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவித்து, மீண்டும் சட்டப்பேரவையைக் கூட்டி ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த டி. ஆணழகன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஏ. செல்வம், பி. கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வழக்குரைஞர் ஆஜராகி, இதேபோன்ற கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் ஒரு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT