தமிழ்நாடு

42 பேரை கடித்த வெறிநாய் பிடிபட்டது

DIN

செங்கல்பட்டு பகுதிகளில் 42 பேரை கடித்த வெறிநாய் பிடிபட்டதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு ராட்டிணகிணறு பகுதி, பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் வெறிநாய் ஒன்று சுற்றித் திரிந்து வந்தது. இந்த வெறிநாய், அப்பகுதி மக்களை விரட்டிச் சென்று கடித்தும், அச்சுறுத்தியும் வந்தது.
இந்த நிலையில், அந்த வெறிநாய் கடித்ததில் 42 பேருக்கு காயம் ஏற்பட்டு, அவர்களுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி பொறுப்பு ஆணையர் விஜயலட்சுமியிடம் கேட்டபோது, செங்கல்பட்டு நகராட்சிக்கு கடந்த சில வருடங்களாக இயக்குநர் முறையாக நியமனம் செய்யப்படவில்லை.
இந்த நிலையில், புதன்கிழமை காலை முதல் இதுவரை 42 பேர் வெறிநாயால் கடிப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரியவந்தது. அந்த வெறி நாயைப் பிடிக்கும் பணியில் நகராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். மேலும், சென்னையில் உள்ள புளுகிராஸ் அமைப்பிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து புளுகிராஸ் அமைப்பினரும், நகராட்சிப் பணியாளர்களும் இணைந்து வெறி நாயைத் தேடி வந்த நிலையில், வியாழக்கிழமை அந்த வெறிநாய பிடிபட்டது என்றார்.
வெறிநாய் பிடிபட்டாலும் இந்தப் பகுதிகளில் நடமாட அச்சம் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT