தமிழ்நாடு

பழனி மலைக் கோயிலுக்கு 2 ஆவது ரோப் கார் அமைக்கத் திட்டம்

தினமணி

பழனி மலைக் கோயிலில் 2 ஆவது ரோப் கார் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி தெரிவித்தார்.

பழனி கோயிலில் தவில், நாதஸ்வர கலைஞர்களுக்கான மேம்பட்ட பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியில் வியாழக்கிழமை பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பழனி கோயிலில் நடைபெறும் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திர விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு விழா நாள்கள் மட்டுமின்றி, முன்னதாகவே குடிநீர், பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தி தரப்படும்.

ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்குவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. கோயிலுக்கு வேண்டிய பணியாளர் பற்றாக்குறையை கோயில் நிர்வாகமே சரி செய்து கொள்ள முடியும். இரண்டாவது ரோப்கார் திட்டம் பரிசீலனையில் உள்ளது. திருக்கோயில் தனியார் பாதுகாவலர்கள் மீதான புகார்கள் குறித்து விசாரிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT