தமிழ்நாடு

ரயிலில் விழுந்து 3 பேர் பலி சம்பவம்: பாதுகாப்பு ஆணையர் மார்ச் 1-இல் விசாரணை

DIN

சென்னை:  செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையிலான புறநகர் மின்சார ரயிலில் வியாழக்கிழமை பயணித்த 3 பேர் தவறி விழுந்து உயிரிழந்ததும், 4 பேர் காயம் அடைந்தது தொடர்பாக, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் மார்ச் 1-ஆம் தேதி விசாரணை மேற்கொள்கிறார்.
 சென்னையில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் அன்று காலை 10 மணிக்கு விசாரணை தொடங்குகிறது. விபத்து தொடர்பாக விவரங்கள் அறிந்தவர்கள், நேரில் பார்த்தவர்கள் விசாரணை நாளில் நேரில் வந்து சாட்சியம் அளிக்கலாம். மேலும், நேரில் வர இயலாதவர்கள்  "ரயில்வே பாதுகாப்பு ஆணையர், சதர்ன் சர்க்கிள் 7 சேஷாத்ரி சாலை, பெங்களூரு- 560 009 தொலைநகல் 080-22260650' என்ற முகவரியில் கடிதம் வாயிலாகவும் அனுப்பலாம் என்று ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT